சாரு, இந்த வார்த்தையின் பின்னால் நான் கண்ணை மூடிக் கொண்டு போகிறேன். எங்கே, என்ன கிடைக்கும் என்று தேடி தேடி படிக்கிறேன். சுஜாதாவிற்கு பிறகு என்னுள் இருந்த வெற்றிடத்தை போக்கிய வார்த்தை இந்த சாரு.
யார் இந்த மிஸ்கின், இரு படங்களை இயக்கியவர், ஒரு தேர்ந்த சினிமா வியாபாரி. அனால் சாரு நீங்கள் யார், ஒரு தேர்ந்த படைப்பாளி,அற்புதமான இலக்கியவாதி. உங்களை போல் ஒருவர் இவ்வளவு கீழ் இறங்கி வசை பாட வேண்டுமா? மிஸ்கின் மேல் நீங்கள் சுமத்தும் குற்றங்களில் என்னில் நெருடுவது இரண்டு...
1. மிஸ்கின் சிறுவர்,சிறுமியர் கலந்து கொண்ட விழாவில் ஆபாசமாக பேசிவிட்டார் ? ( உங்கள் பாசையில் மெண்டல் ரேப் )
ஒரு விழா என்றால் அதில் நிறைய சாதக பாதக விஷயங்கள் பேசப்படலாம். நாம் விழாவிற்கு அழைக்கும் அனைவரும் நாம் விரும்பும் வண்ணம் பேசுவார்கள் என்று சொல்ல முடியாது.
அதே போல் தான், இந்த மிஸ்கின் விசயத்திலும் நடந்தது , நீங்கள் மிச்கின்னை நண்பன் என்றிர்கள், இன்னும் வேறெல்லாம் சொன்னீர்கள் , ஒரு படி மேலே போய் உங்கள் வாரிசு என்று மட்டும் அறிவிக்கவில்லை.அனால் சாரு அது உங்கள் விருப்பம். அதே சமயம் உங்கள் வாசகன் என்ற முறையில் எனக்கு புலப்பட்ட ஒன்று, உங்கள் இருவருக்கும் என்றுமே ஒரே அலைவரிசை இருந்ததில்லை அது இருக்கவும் முடியாது என்பது என் தாழ்மையான கருத்து.
2. இந்த பிரச்சினை தொடங்கும் முன் இதே மிச்கினை கொண்டாடியது ஏன்? (நான் அனந்த விகடன் வாங்கி முதலில் தவறாமல் படிப்பது உங்களைதான் , கண்ணின் கதை ஆகட்டும், நந்தலாலா ஆகட்டும்.. எவ்வளவு முரண்பாடு )
கண்ணின் கதை, இந்த புத்தகத்தை மிஸ்கின் கொடுத்த கதையை மிகவும் சிலாகித்து விகடனில் எழுதி இருந்திர்கள், அனால் அப்பொழுதே நீங்கள் எழுத மறந்தது, அதே புத்தகத்தை நீங்கள் பல வருடம் முன்பே மொழி மாற்றம் செய்ததை. நீங்கள் நினைத்து இருந்தால் அப்பொழுதே மிஸ்கினின் முகத்திரையை கிழித்து இருக்கலாம். அனால் அப்படியும் செய்ய வில்லை. சாரு இது உங்கள் மேன்மையான குணத்தை காட்டுகிறது.
அதே சாரு இப்பொழுது , ஒரு சண்டை என்று வந்த உடன் இதை எல்லாம் போட்டு உடைப்பது என்ன நியாயம் சாரு?அது உங்களை நீங்களே சிறுமை படுத்துதல் ஆகாதா சாரு ?
ஒரு வாசகனின் வேண்டுகோள் என்று நினைத்தாலும் சரி இல்லை ஒரு நண்பனின் அக்கறை என்று நினைத்தாலும் சரி....
சாரு, நீங்கள் உக்கிரம் காட்டக் காட்ட இந்த கேடு கெட்ட சினிமா மக்கள் அதில் குளிர் காய்வார்களே தவிர உணர மாட்டார்கள். போதும் சாரு நீங்கள் "வஷிஸ்டர்" உங்கள் வார்த்தைகளை உங்கள் வாசகர்களாகிய எங்களுக்கு மட்டும் பயன்படுத்துங்கள். அதை நாங்கள் போற்றி பாதுகாப்போம்.