புத்தக் வெளியீட்டு விழா – ௩௨
http://charuonline.com/blog/?p=1748டியர் இம்ரான்,
இதைப் போலவே பல நண்பர்கள் எழுதியுள்ளனர். இருந்தாலும் என் மனதுக்கு எது சரி என்று படுகிறதோ அதைத்தானே நான் செய்தாக வேண்டும்? எனக்கு தினமும் எத்தனையோ ஆபாசக் கடிதங்கள் வருகின்றன. ராத்திரி ரவுண்ட் அப் என்ற மஞ்சள் பத்திரிகையில் என்னைப் பற்றி எப்படி எப்படி எல்லாமோ எழுதியிருந்தார்கள். கோபம் வரவில்லை. ஆனால் ஒரு நண்பன் அப்படிச் சொல்லலாமா என்பதே என் கேள்வி. என் நாவலை யாரோ ஒருவர் சரோஜாதேவி புத்தகம் என்று சொல்லலாம். நண்பனாகப் பழகியவர் சொல்லக் கூடாது. சொன்னால் அது பற்றி 200 பக்கம் பதில் எழுதுவேன். இது ஒரு ராந்தவூ (rendesvouz); அவ்வளவுதான்.
சொல்வதற்கு இன்னும் இருக்கிறது… பொறுத்துக் கொள்ளவும். நீங்கள் கேட்டுள்ள மற்ற கேள்விகள்/சந்தேகங்களை தொடரின் போக்கிலேயே பார்ப்போம்.
சுஜாதாவுக்குப் பிறகு என்று சொல்லியிருக்கிறீர்கள். இப்போதுதான் மனுஷ்ய புத்திரன் எழுதியதைப் படித்துப் பார்த்தேன். என் வாசகர்களை நினைத்தால் அவருக்கு ஒஸாமா பின் லாடனின் தற்கொலைப் படை ஞாபகம் வருகிறதாம். இன்னும் விரிவாக எழுதியிருக்கிறார். உயிர்மையில் படித்துப் பாருங்கள்.
தங்கள் அன்புக்கு நன்றி.
சாரு
http://charuonline.com/blog/?p=1748
No comments:
Post a Comment