அட என்னடா இது பெரிய எழவா போச்சுதே என்று எழுந்து வெற்று உடம்போடு வெளியே வந்தேன்....நேரம் பார்க்கவில்லை....சரி இப்படியே நடக்கலாம் என்று நடக்க தொடங்கினேன்..இங்கொன்றும்..அங்கொன்றுமாய்...மக்கள் நடைபாதையில் ஆண் பெண் பேதமின்றி உறங்கி கொண்டிருந்தார்கள்.
இவர்கள் இங்கேயே உண்டு உறங்கி உறவும் கொண்டு...பிள்ளை பெத்தெடுத்து வாழ்ந்து மரணித்தும் போய்.....என்ன வழக்கை இது....இவர்களுக்கென்று குறிக்கோள் எனபது இல்லையா..
சரி நம் விஷயத்துக்கு வருவோம்...
அவளோடு எனக்கு பழக்கம் இருந்தது என்று அவன் வந்து சொன்ன உடனேயே நான் சுதாரித்து கொண்டு இருக்க வேண்டும்....சற்றே சபலத்தில் அசந்துவிட்டேன்..அவன் எனக்கு ரொம்ப நாள் பழக்கமில்லை,மூன்று நாட்கள் முன்பு அவர் வந்து இவனை தன் ஊர்க்காரன், உன்னுடன் இவனை சில நாட்கள் தங்க வைக்க முடியுமா என்றே கேட்டார்...அன்றும நான் பதில் சொல்லும் முன்பே அவர் இவன் பெட்டியை தூக்கி கொண்டு உள்ளே வந்து விட்டார்.. சரி என்று இவனை விட்டதில் தன் இப்பொழுது பிரச்சினையே...
படுபாவி...இவன் ஊரில் செய்த காதல்களை எல்லாம் சொல்லவதற்கு நானா கிடைத்தேன்..மூச்சு விடாமல் "ஓவ்வொன்றையும்" சொல்லி முடித்த நேற்று மாலையில் இருந்து எனக்கு தூக்கம் அம்பேல்...
இவன் சொல்லி முடித்த சற்று நேரத்தில் என் கைபேசி அலறியது...வேறு யார் என் வீட்டில் உள்ளவர்கள் தான்...எடுத்து பேசினேன்"டேய்...உனக்கு பெண் பார்த்து முடிவாகி விட்டது...சொல்லும் பொழுது வந்து ஒழுங்க தாலிய கட்டு புரிஞ்சதா...என்று மாமா அலறினார்..மேலும் அவரே தொடர்ந்தார்..பெண்ணின் பெயர்,ஊர்........ சொல்லும் போதே எனக்கு தலை சுற்றியது ...எதிரே அவன் என்ன "பங்காளி" வீட்லே விசேசம் போல..அப்பாவியாய் உரிமையுடன் கேட்டான் ...
1 comment:
ரொம்ப அடிவங்குநின்களோ!!!
Post a Comment